முடிவின்றி தொடரும் பொருளாதார நெருக்கடி!!

புத்தளம் - வனாதவில்லுவ பொலிஸ் நிலைய நிலைய நிர்வாக கட்டட தொகுதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க திறந்துவைத்துள்ளார்.

குறித்த நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

மேலும், குறித்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் அடுத்த வருடமும் நெருக்கடிகள் தொடரும் எனவும் உலக பொருளாதார நெருக்கடி யுத்தம் போன்றது எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

வெளிநாடுகளில் இருந்து எமக்கு கிடைக்கும் வருமானங்களை நாட்டுக்குள் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்திலேயே அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை குறைக்க நிதி அமைச்சுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா இந்த நடைமுறையை சாதகமாக கையாள ஆரம்பித்துள்ளது. எனவே, நிதி அமைச்சரிடம் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை குறைக்க அல்லது இரத்துச்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலக பொருளாதார நெருக்கடி இந்த வருடத்துடன் நிறைவடைய போவதில்லை எனவும் தொடர்ந்தும் அடுத்த வருடமும் நீடிக்கும்.

இந்த பொருளாதார நெருக்கடியானது “யுத்தம் போன்றது” தொடர்ச்சியாக முகம்கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி