முன்னாள் ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்தி வசூல்!!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி கப்பம் கோரியமை, பொலிஸ் நிலையங்ள் உட்பட அரச நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்தமை உட்பட பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒருவரை கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தனது பெயரை போன்ற பெயரை கொண்டுள்ள நபர் தனது பெயரை பயன்படுத்தி இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடக செயலாளராக பணியாற்றி வரும் ரொஹான் வெலிவிட்ட வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

குறித்த நபர் முன்னாள் ஜனாதிபதியின் பெயரை கூறி, அனுராதபுரத்தில் உள்ள ஒரு பௌத்த பிக்குவிடம் கப்பம் கோரியுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் இப்படியான சம்பவங்கள் நடந்தால், 077-1500500 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு தெரிவிக்குமாறும் ரொஹான் வெலிவிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி