சர்வதேச விருதுகளை பெற்றுள்ள ஈழத்து இளைஞன்!

தமிழீழ விடுதலைப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் பல்வேறுபட்ட கலைஞர்கள் இந்த மண்ணில் உருவாக்கப்பட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் தாயகக் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,தமீழீழ விடுதலைப் புலிகள் இந்த மணணில் இருந்த காலப்பகுதியில் பல்வேறு பட்ட கலைஞர்கள் உருவாக்கப்பட்டார்கள்.

கலை என்பது மனிதனது உள்ளத்தில் இருந்து வருகின்ற ஒருவகையான உணர்வுகள். நம்பிக்கையும் எண்ணங்களும் ஒவ்வொரு மனிதர்களிடமும் இருந்தால் அவர்களால் சாதிக்க முடியும்.இந்த ஈழ மண்ணில் பிறந்து வளர்ந்த டேவிற் யுவராஜன் தென்னிந்தியாவில் தனக்கென தடம்பதித்து சர்வதேச விருதுகளைப் பெற்று பெருமை சேர்த்திருக்கின்றார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்நிகழ்வில் தாயகக் கலைஞர் டேவிற் யுவராஜன் உட்பட 17 கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி