அரசியல் கைதிகள் போராட்டத்தைக் கைவிட்டனர்!!

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் அளித்த வாக்குறுதியை அடுத்து, அரசியல் கைதிகள் தமது உணவு ஒறுப்புப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் தொடர் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதேவேளை கைதிகளை விடுவிக்கக் கோரி, பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் இன்று அநுராதபுரத்தை அடைந்தது.

அங்கு சிறைச்சாலை முன்பாகக் கூடிய மாணவர்கள் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோசங்களை எழும்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி