மனைவியைக் காண கட்டுநாயக்க விமானநிலையம் சென்ற தமிழ் கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

வாழைச்சேனையில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயாகிய நந்தினி என்பவரே கடந்த 13/9/2018 அன்று காலை 6.30 மணியளவில் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளார்.

கத்தார் நாட்டில் 3 ஆண்டுகள் பணி புரிந்து கடந்த 13/9/2018 அன்று நாடு திரும்பியுள்ளார். இவர் இவ்வாறு ஊருக்கு வரும் செய்தியை தொலைபேசி மூலம் 2 தினங்களுக்கு முன் தன் கணவருக்கு அறிவித்து இருந்த நிலையில் கடந்த 13/9/2018 பல எதிர்பார்ப்புகளுடன் கணவன் விமான நிலையத்திற்கு சென்று காத்திருந்தார்.

ஆனால் 3 ,4 மணித்தியலயம் காத்திருந்தும் மனைவி வரவில்லை. பின் மனைவியின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய பொது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என பதில் வர கணவன் மனைவி வரவில்லை என்று எண்ணி வீடு திரும்பி உள்ளார்.

பலமுறை மனைவியின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய போது தொடர்பு கொள்ள முடியாமை யின் காரணத்தால் மனைவி பணி புரிந்த வீட்டிற்க்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி விசாரித்த போது அவர்கள் 13/9/2018 காலை 6.30க்கு விமான நிலையத்திற்கு அழைத்து சென்று இலங்கைக்கு அனுப்பி வைத்ததாக கூறினார்கள்.பின் கணவருக்கு விமான சீட்டின் பிரதியும் அனுப்பி வைத்தனர்.

கணவனும் இரண்டு பிள்ளைகளும் அழுது புலம்பி தவித்து போனார்கள்.உடனடியாக கணவன் அருகில் உள்ள போலீஸ் நிலையமான வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்க முற்பட்ட போது போலீஸ் அதிகாரி கணவரை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் சென்று. புகார் அளிக்குமாறு கூறினர்....

கணவன் மீண்டும் 15/9/2018 அன்று கொழும்பு விமான நிலைய போலீஸ் நிலையத்தில் சென்று தன் மனைவி தொடர்பாக நடந்த சம்பவத்தை தெரிவித்த போது அவர்கள் விமான நிலையத்தில் உள்ள cctv camera வில் பரிசோதித்த போது தனது மனைவி 3 பைகளுடன் விமான நிலையத்தில் நின்றதும் சிறிது நேரத்தின் பின் ஒரு முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்ட விடயம் தெரிய வந்தது.

பின்பு வாழைச்சேனை போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் செய்து அங்கிருந்து ஒரு புகார் மூலப்பிரதி ஒன்றை கொண்டுவருமாறு விமான நிலைய போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து கணவன் கொழும்பு முழுவது சுற்றி தெரிந்து வீடு வந்து சேர்ந்தார்..

வாழைச்சேனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் கணவர் அதன் பின் மிகவும் மன வேதனையோடு கணவனும் இரண்டு பிள்ளைகளும் தன் மனைவியை தேடித் திரிந்தும் இதுவரை கண்டறிய முடியவில்லை


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி