சூடானில் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் ராணுவ விமானங்கள்! வீடியோ காட்சி!!

சூடானில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இரண்டு ராணுவ விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

சூடானில் உள்ள Khartoum விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அடுத்தடுத்து தரையிறங்கிய இரண்டு ராணுவ விமானங்கள் ஒன்றுடன் ஒன்று பலமாக மோதி கொண்டது.

இதில் 8 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் விமான தளத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், வேகமாக காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் Antonov 26 மற்றும் Antonov 32 என்ற இரண்டு விமானங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. ஆனால் இதில் எந்தவித உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படவில்லை.

சம்பவம் நிகழ்ந்த உடனே விமான நிலையம் மூடப்பட்டு விமானங்கள் மற்ற விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி