தற்போதைய சூழ்நிலை குறித்து ஊடகங்கள் சரியான தகவல்களை வெளியிடவில்லை!!

தற்போதைய சூழ்நிலை குறித்து ஊடகங்கள் சரியான தகவல்களை வெளியிடவில்லை என இராஜாங்க அமைச்சர் ஜே.சீ.அலவதுவல தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்...

தற்போதைய காலச் சூழ்நிலையில் சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்கள் செய்தி அறிக்கையிடுவதற்கும், தரையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கும் இடையில் தெளிவான வித்தியாசம் உண்டு.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ஊடகங்கள் செயற்பட்ட விதம் வித்தியாசமானது.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் போது ஊடகங்களுக்கு காணப்படும் சுதந்திரம் பற்றி புரிந்து கொள்ளாத நிலைமை நீடிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி