புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை எளிதாக்க கட்டார் அரசு நடவடிக்கை!

நாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய முதற்கட்டமாக இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான விசா செயலாக்கத்தை துரிதப்படுத்த கட்டாரில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இலங்கையில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்படும் இந்த சேவை, விரைவில் ஏனைய தெற்காசிய நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதற்கமைய இந்த துரிதப்படுத்தப்பட்ட சேவையை கட்டார் விசா மையங்கள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆரம்ப விசா ஒப்புதல் கட்டார் அதிகாரிகளால் வெளியிடப்பட்டவுடன், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறுகிய காலத்திற்குள் தங்கள் நாட்டில் மருத்துவ சோதனை மற்றும் பயோமெட்ரிக் அங்கீகார தேவைகளை மேற்கொள்ள முடியும்.

கட்டாரில் உள்ள பழைய விசா செயல்முறைக்கமைய, மருத்துவ சோதனை தேவைப்படுகிறது, அங்கீகாரம் பெற்ற பயோமெட்ரிக் ஆய்வுகளை செய்து முடிக்க சில நேரங்களில் பல வாரங்கள் செல்கின்றது. இதனாலேயே இந்த சேவை தற்போது எளிதாக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான பல பகுதிகளை இலங்கை மற்றும் கட்டார் அரசாங்கங்கள் அடையாளம் கண்டுள்ளன. இதில் வேலைவாய்ப்பு முக்கிய பங்கினை வகிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமகாலத்தில் 140000 இலங்கையர்கள் கட்டாரில் பணியாற்றி வருகின்றனர். அடுத்து வரும் 2 வருடங்களில் 300,000 இலங்கை தொழிலாளர்களை கட்டார் எதிர்பார்க்கின்றது. அதற்கமைய இந்த விசா நடை முறை தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி