புலிகளின் போர் கப்பலை பொதுமக்கள் பார்வையிட தடை விதித்துள்ள இராணுவம்!!

விடுதலைப் புலிகள் அமைப்பின் போர் கப்பலை, பொதுமக்கள் பார்வையிட இராணுவத்தினர் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதி யோர்தான் நாட்டுக்கு சொந்தமான போர் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளது.

பின்னர் குறித்த கப்பல் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது இலங்கைப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.இதேவேளை, விடுதலைப் புலிகளின் கடற்புலி அணியினர் இந்த கப்பலை சிறப்பு பயிற்சிகளுக்காக பயன்படுத்தியதாகவும் இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், குறித்த கப்பலின் மேற்பாகங்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் அகற்றப்பட்ட நிலையில், அதன் அடித்தளம் மட்டும் கடலில் மிஞ்சியிருந்தது.

முல்லைத்தீவு போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா வரும் பயணிகள் இவற்றை பார்வையிட அந்தப்பகுதிக்கு சென்று வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்தப் பகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கு இராணுவத்தினர் தற்பொழுது தடைவிதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி