சுற்றுலா பயனிகள் குறித்து அதிக கவனம் செலுத்தும் பிரதமர்!!

குறைப்பாடுகள் இருந்தாலும் அவற்றை சீர்செய்து முன்னோக்கி செல்ல வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று ஊடகங்களுக்காக விசேட உரையை நிகழ்த்தும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு பயணம் செய்ய மிக சிறந்த நாடு என்ற இலங்கைக்கு கிடைத்துள்ள முதலிடம் சம்பந்தமாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவத்தை கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. அதற்கான பிரதிபலன் தற்போது கிடைத்துள்ளது.

இந்த பிரதிபலனில் திருப்தியடைந்து சுற்றுலா தொழிற்துறையின் பணிகளை நிறுத்த முடியாது. இது பிரதிபலனின் ஆரம்பம் மட்டுமே.

எமது ஏற்றுமதி பொருளாதாரத்தில் சுற்றுலா தொழிற்துறைக்கே முதலிடம். இந்த துறையானது குறுகிய காலத்தில் வெளிநாட்டு வருமானத்தை பெறக் கூடிய தொழிற்துறையாகும்.

இந்த சுற்றுலாத்துறையின் கீழ் பெரிய ஹொட்டல்கள் மட்டுமல்ல, வீடுகள் சார்ந்த தங்குமிடங்களை வழங்குதல், சிறிய கடைகள், உணவகங்களை ஏற்படுத்தி நாம் முன்னோக்கி செல்ல வேண்டும்.

பெருமளவில் பணத்தை செலவிடும் சுற்றுலாப் பயணிகளை நாம் இலங்கைக்கு வரவழைக்க வேண்டும். இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல, கிடைக்கும் வருமானம் தொடர்பாகவும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இதனால், சாதாரண மட்டத்திலான சுற்றுலாப் பயணிகளை போல் உயர் மட்ட சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பை பெறுவது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்.

எமது கலாசாரம் மற்றும் இயற்கையான இடங்களை நாம் பாதுகாத்து கொள்ள வேண்டும். அதேபோல் புதிய அங்கங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி