ஆயுத ஏற்றுமதியை ஐரோப்பிய நாடுகள் நிறுத்த வேண்டும்! ஜேர்மன் வலியுறுத்தல்!!

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் மரணம் தொடர்பான உண்மை வெளியாகும் வரை, சவுதி அரேபியாவிற்கு ஆயுத ஏற்றுமதியை ஐரோப்பிய நாடுகள் நிறுத்த வேண்டும் என ஜேர்மன் அமைச்சர் பீட்டர் அல்ட்மையர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் வசித்து வந்த சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஜேர்மனி விளக்கம் கேட்டது. அதனைத் தொடர்ந்து, சவுதி அரேபியா தரப்பில் கூறப்பட்ட விளக்கம் திருப்திகரமாக இல்லை என்று ஜேர்மனி குற்றஞ்சாட்டியது.

இந்நிலையில், ஜேர்மன் பொருளாதார அமைச்சர் பீட்டர் அல்ட்மையர் ஐரோப்பிய நாடுகளுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவர் கூறுகையில், ஜமாலுக்கு என்ன நடந்தது என்பது தெரிய வரும் வரை, தங்களது அரசு ஒப்பந்தத்தின்படியான ஆயுத ஏற்றுமதியை நிறுத்த உள்ளது என தெரிவித்துள்ளார்.

அதேபோல் பிற ஐரோப்பிய நாடுகளும் சவுதிக்கு ஆயுத ஏற்றுமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, ஜேர்மன் அரசு இந்த ஆண்டு 462 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை, சவுதி அரேபியாவுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்திருந்தது. இது அல்ஜீரியாவுக்கு பிறகு இரண்டாவது மிகப்பெரிய ஏற்றுமதி ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி