புலம்பெயர் கனடியர்களை ஆதரவைப் பெற்ற கனடாவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

கனடா - ஒன்ராறியோ மாகாணத்தின் உள்ளூராட்சித் தேர்தல்களின் முன் கூட்டிய வாக்களிப்புக்கள் முடிவடைந்து எதிர்வரும் திங்கட்கிழமை ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழர்கள் அதிகமாக வாழும் ஸ்காபரோ, மார்க்கம், ஒஷாவா மற்றும் பிராம்டன் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், பல வேட்பாளர்கள் தமிழ் மக்களின் ஆதரவைக் கோரிய நிலையில் நடத்தப்படுகின்றன.பிராம்டன் நகரில் மேயராக பதவி வகித்து மீண்டும் அப்பதவிக்காக போட்டியிடும் Linda Jeffery ஏகோபித்த ஆதரவு தொடர்ந்தும் ஏறு முகமாக இருப்பதாகவே கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

சில தினங்களுக்கு முன்னர் இதை உறுதிப்படுத்துவது போல கனடாவின் பிரதான மூன்று கட்சிகளின் பிராம்டன் பகுதி மத்திய பாராளுமன்ற உறுப்பினர்களும், ஒன்ராறியோசட்ட மன்ற உறுப்பினர்களும் Linda Jeffery ‌அவர்களுக்கு தமது ஆதரவை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள்.

தமிழ்க் கனடியர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பிரத்தியேக நேர்காணலில், Linda Jeffery பல்வேறு விடயங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தனது பதவிக்காலத்தில் தமிழ் மக்களுடன் தனக்கிருந்த பிணைப்புக்களை சிறப்புற வெளிப்படுத்திய அவர், எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து பணிபுரியும் வழி வகைகளையும் தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கனடியர்களின் மரியாதையை பெற்றிருப்பவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுப் பணியாற்றுவதே தனது நோக்கம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, மக்களை ஒன்றாக்குவதில் தனக்கிருக்கும் கடப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதுடன், சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தி, அதில் குளிர்காய்ந்து அரசியல் இலாபம் காண நினைக்கும் சக்திகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, பிராம்டன் பகுதிகளில் அதிக அளவில் வாழும் சீக்கிய, வட இந்தியவம்சாவளியினைச் சே‌ர்ந்தவர்களுடன் ஈழத்தமிழ்க் கனடியர்களின் ஆதரவும் ஏகோபித்துக் கிட்டும்நிலை இருப்பதால் Linda Jefferyயின் வெற்றிவாய்ப்புக்கள் பிரகாசமாக இருப்பது அவதானிக்கப்படுகிறது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி