பொலிஸ் அதிகாரிக்கு நீதி கோரி வீதியில் இறங்கிய மக்கள்!!

களுத்துறை தெபுவன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன் சட்டவிரோத மணல் கடத்திய லொறி ஒன்றை கடந்த 30 ஆம் திகதி கைப்பற்றியுள்ளார்.

எனினும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அந்த லொறியை விடுவித்ததாகக்கூறி தனது துப்பாக்கியுடன் வீதியில் இறங்கி போராட்டத்த நடத்தினார்.

இதனையடுத்து, துப்பாக்கியுடன் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாகக்கூறி குறித்த பொலிஸ் சார்ஜன் கைது செய்யப்பட்ட எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இன்று களுத்துறை நகரத்திலும் தெபுவன பொலிஸ் நிலையத்திற்கு அருகிலும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக போராட்டம் நடாத்தியுள்ளனர்..


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி