அகில இலங்கை தமிழ்மொழிதின விருது விழா இன்று ஆரம்பம் !

கல்வி அமைச்சின் ஏற்றாட்டில் நடைபெறவுள்ள அகில இலங்கை தமிழ்மொழி தின விருது வழங்கும் விழா இன்று ஆரம்பமாகவுள்ளது.

மாத்தளை இந்து தேசிய கல்லூரி மைதானத்தில் இந்த நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் எமது செய்திப்பிரிற்கு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் பங்குபற்றுவதற்காக வடக்கு கிழக்கை சேர்ந்த மாணவர்கள் மற்றும் இந்திய கலைஞர்கள் மாத்தளை பிரதேசத்திற்கு வருகைதந்துள்ளதாக எமது பிரதேச செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற தமிழ்மொழி தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இந்தநிகழ்வில் விருதுகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி