ஜனாதிபதி மற்றும் பிரதமரிற்கு நீதிமன்ற அழைப்பாணை!!

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போதைய ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் உடன்படிக்கையொன்று கையொப்பமிடப்பட்டதாக போலி ஆவணமொன்றை ஊடகங்களுக்கு காண்பித்த குற்றச்சாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 22ஆம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

இந்த வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி விகும் களுவாரச்சி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு விசாரணைகளில் சாட்சியமளிக்கும் நோக்கில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிரதிவாதியான திஸ்ஸ அத்தநாயக்க நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த போதிலும், சாட்சிகளான ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.

கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த திகதியொன்றில் கொழும்பில் வைத்து தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டதாக போலி ஆவணமொன்றை ஊடகங்களுக்கு சமர்ப்பித்தன் மூலம் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச் செயல் ஒன்றை திஸ்ஸ அத்தநாயக்க மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி