கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்!!

1000 ரூபாயை அடிப்படை சம்பளமாக கேட்டு மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று கொழும்பு காலி முகத்திடலில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் காரணமாக கொழும்பு - காலி வீதி, லோட்டஸ் சுற்றுவட்டத்துடன் மூடப்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் “ஒக்டோபர் 24” எனும் தலைப்பில் இந்த போராட்டம் இடம்பெற்று வருகிறது.

சமூக வலைத்தளங்களின் ஊடாக ஒன்றிணைந்த இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டமாக இது முன்னெடுக்கப்படுகின்றது.

இதில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இளைஞர்கள் கொழும்புக்கு பிரவேசித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி