தோழியின் தந்தையை திருமணம் செய்த பெண்!

இளம் பெண் ஒருவர் தனது உயிர் தோழியின் தந்தையை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவரே இந்த முடிவே எடுத்துள்ளார்.
டெய்லர் (வயது 27) மற்றும் அமண்டா (வயது 30) என்ற இரு பெண்களும் ஒரே இடத்தில் வேலை செய்த வந்த நிலையில் நெருங்கிய தோழிகளாகியுள்ளனர்.
அமண்டா மூலம் டெய்லருக்கு அவரின் தந்தையான கெர்ன் லெய்மன் (வயது 54) உடன் நட்பு ஏற்பட்டது. தொடக்கத்தில் நட்புடன் இருந்த இவர்கள் பின்னர் காதலிக்க ஆரம்பித்துள்ளனர்.

தன்னை விட 27 வயது அதிகமான தந்தை வயது நபரை டெய்லர் காதலித்ததால் இதற்கு குடும்பத்தார் எதிர்த்தனர். அத்தோடு தனது தந்தை லெய்மனுடனான, டெய்லரின் பழக்கத்தை தெரிந்து கொண்ட அமண்டா அதிர்ச்சியடைந்தார்.
அதற்குப் பின்னர் எல்லோரும் பேசி ஒரு முடிவுக்கு வந்து லெய்மனும், டெய்லரும் கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது அமண்டா, டெய்லர், லெய்மன் மூவரும் மகிழ்ச்சியாக ஒற்றுமையோடு வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து டெய்லர் கூறுகையில்;
எங்கள் வயது வித்தியாசம் குறித்து கவலையில்லை, எங்களை பார்க்கும் பலர் தந்தை – மகள் என நினைத்து விடுகிறார்கள். என் மீது லெய்மன் மிகுந்த பாசத்தோடும், அக்கறையோடும் இருக்கிறார்.
என் உயிர் தோழி அமண்டா எங்களை ஏற்று கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து லெய்மன் தெரிவிக்கையில்;
டெய்லர் நகைச்சுவை உணர்வைக் கொண்டவர். அவள் மிகவும் நேர்மையானவள். எனக்கு அவர் மனைவியாக மட்டுமில்லாமல் சிறந்த தோழி என்றும் கூறியுள்ளார்.

Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி