சற்றுமுன் லீக்காகிய ரஜினியின் கதாபாத்திரம்!

ரஜினியின் 2.0 படம் பார்க்க ரசிகர்கள் நீண்ட நாட்களாக வெயிட்டிங். அப்படம் நடித்து முடித்தகையோடு ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். படப்பிடிப்பும் வேகமாக நடந்து வருகிறது.

இப்போது என்ன விஷயம் என்றால் பேட்ட படத்தின் கதை என்று சமூக வலைதளத்தில் ஒன்று லீக் ஆகியுள்ளது. ரஜினி வட இந்தியாவில் உள்ள ஒரு கல்லூரியில் ஹாஸ்டல் வார்டனாக இருக்கிறாராம், அங்கு மாணவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனையின் போது ரஜினியின் உண்மையான பின்னணி என்ன என்ற பிளாஸ்பேக் வருமாம்.

பாட்ஷா படம் போல அதில் மும்பையில் தாதாவாக நடித்த ரஜினி பேட்ட படத்தில் மதுரை ரவுடி என்கிறார்கள்.

மதுரையில் வெள்ளை வேட்டி சட்டையுடன் கெத்தாக தாதாவாக சுற்றி வந்த அவர் வட இந்தியா ஏன் சென்றார் கல்லூரி ஹாஸ்டல் வார்டனாக பணியாற்றுவது எதற்காக என்பது போல் கதை செல்லுமாம்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி