ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை!சர்வதேச சந்தையில் நெருக்கடி!!

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை அமுல்படுத்தப்படும் தினம் நெருங்கி வரும் வேளையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பாரியளவில் அதிகரித்து வருவதாக வர்த்தக கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச எரிபொருள் சந்தையின் பிரதான தரகு நிறுவனமான பிரேண்ட் நிறுவனத்தின் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை கடந்த புதன் கிழமை பாரியளவில் அதிகரித்தது.

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 86.74 அமெரிக்க டொலராக உயர்வடைந்தது. இந்த விலை இன்று 86.9 டொலராக அதிகரித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை 1.7 வீதமாக அதிகரித்து வருகிறது.

ஈரானின் எரிபொருள் சர்வதேச சந்தைக்கு வருவது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தட்டுப்பாட்டை போக்க சவூதி அரேபியாவும் ரஷ்யாவும் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சவூதி அரேபியா தினமும் 10.7 மில்லியன் பீப்பாய் கச்சாய் எண்ணெயை உற்பத்தி செய்கிறது. இதனை 12 மில்லியனாக அதிகரிக்க அந்நாடு திட்டமிட்டுள்ளதாக சவூதியின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக விதித்துள்ள பொருளாதார தடைகள் காரணமாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல ஆசிய நாடுகள் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.

ஈரானுக்கு தேயிலையை பிரதானமாக ஏற்றுமதி செய்யும் இலங்கை, அதற்கு பதிலாக ஈரானிடம் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்து வந்துள்ளது.

அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக இந்த வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனை தவிர அமெரிக்கா தனது நாட்டில் வட்டி வீதங்களை அதிகரித்துள்ளதால், உலக நாடுகளின் நாணயங்களின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆசிய, ஐரோப்பிய, ஆபிரிக்கா உட்பட உலகின் பல நாடுகளின் நாணயங்களின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

பங்கு சந்தைகள் உட்பட உலக நாடுகளில் டொலர்களில் செய்யப்பட்டிருந்த நிதி முதலீடுகள் நேரடியாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளமை இந்த நிலைமைக்கு காரணம் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி