வடக்கு, கிழக்கில் மக்களின் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!!

வடக்கு, கிழக்கில் மக்களுக்கு சட்டரீதியாக சொந்தமான காணிகளை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி சம்பந்தமாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்குழுவின் கூட்டம் நேற்று மாலை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற போதே ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

உரிய காலவரையறை உருவாக்கி, அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் அதன் முன்னேற்றத்தை அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி