டொலரின் பெறுமதி வலுவடைவதால் மக்களுக்கு ஏற்ப்படபோகும் பிரச்சினை!!

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி சம்பந்தமாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், அரசாங்கம் இதுவரை சட்டரீதியான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பேர்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்திடம் பணத்தை பெற்றுக்கொண்ட அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலும் இன்னும் வெளியிடப்படவில்லை.

குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவி கருணாநாயக்க மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு மீண்டும் அமைச்சர் பதவிகளை வழங்க அரசாங்கம் தயாராகி வருகிறது.

அதேவேளை விரைவில் அமெரிக்க டொலரின் பெறுமதி 200 ரூபாயாக அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக வாழ்க்கை செலவு அதிகரித்து மக்கள் கஷ்டங்களுக்கு உள்ளாகலாம். நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பானது கடனை செலுத்துவதற்கு மாத்திரமே போதுமானதாக இருக்கின்றது.

அமெரிக்க டொலரின் பெறுமதி வலுவடைந்த காரணத்தினால், இந்த நிலைமை ஏற்பட்டதாக அரசாங்கம் கூறினாலும் மத்திய வங்கியின் பிணை முறி மோசடி காரணமாக இலங்கையின் பொருளாதார சரிவடைந்துள்ளது.

இந்த மோசடி காரணமாக வங்கிகளின் வட்டி வீதங்கள் 3 வீதமாக உயர்ந்துள்ளன. மத்திய வங்கியின் பிணை முறி மோசடியால் நாட்டுக்கு ஒரு ட்ரில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நடந்த பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவும் தனது அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ள போதிலும் அது தொடர்பாகவும் விசாரணைகள் எதுவும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி