ராஜீவ் காந்தி கொலைச் சூத்திரதாரி இவரா? மூடிமறைக்கப்பட்ட திடுக்கிடும் ஆதாரங்கள்!

இந்தியாவின் முக்கிய அரசியல் ஆளுமையாகவும் - தலைவராகவும் அந்நாட்டு மகளால் கருதப்பட்ட அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி, 1991 ஆம் ஆண்டு மே 21 அன்று தமிழகத்தில் (ஸ்ரீபெரும்புதூர்) தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ராஜீவ் காந்தியின் கொலை குறித்த சிபிஐ விசாரணையிலும் சரி, ஜெயின் கமிஷனிலும் சரி எண்ணற்ற பகீர் தகவல்கள் வெளிவந்துகொண்டே இருந்தன.

ராஜீவ் கொலை வழக்கில் ஈடுபட்டவர்களென கருதப்படுபவர்கள் கொலையில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால், லட்சோப லட்சம் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த ராஜீவ் கொலையின் பின்னணியில் உலக நாடுகளின் சதியும்.. முக்கியமாக இந்திய அரசியல் தலைவர்களின் சதியும் உள்ளன என்பவை தான் ஜெயின் கமிஷன் விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மைகள்.

இதே கூற்றினை காங்கிரஸ் தலைவர் திருச்சி வேலுச்சாமியும் ஜெயின் கமிஷனில் பதிவு செய்துள்ளார். அதே போல், ராஜீவ் கொலையில் சந்தேகிக்கப்பட்ட நபர்களுள் ஒருவர் நேமி சந்த் ஜெயின் என்கிற சாமியார் சந்திரா சாமி.

இந்தியாவின் புரியாத புதிர்களில் ஒருவர்தான் இந்த சந்திராசாமி. அவர் அரசியல் பேரங்கள், ஆயுத பேரங்கள் நடத்தி வந்ததாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டது. சந்திரா சாமி, முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு மிக நெருக்கமானவர். நரசிம்மராவுக்கு மட்டுமல்லாமல், வெளிநாட்டு வி.ஐ.பிகள் பலருக்கு ஜோதிட ஆலோசகராகவும் இருந்தவர்.

அந்த அடிப்படையிலே ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதற்கும் சந்திரா சாமிக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அது குறித்து சி.பி.ஐ எப்போதும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் சந்திரா சாமியை குற்றம் சாட்டுபவர்கள், "ராஜீவ் காந்தியை கொல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட 'பெல்ட் பாம்' இவரின் மூலம்தான் கொண்டு வரப்பட்டது" என்ற பகீர் தகவலை முன்வைத்துள்ளனர்.

அதே போல், ராஜீவ் காந்தி கொலைவழக்கினை விசாரித்துவந்த ஜெயின் கமிஷனின் விசாரணையின்போது, ''ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டதும் சந்திராசாமி துள்ளிக்குதித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், 'நரசிம்மராவை பிரதமராக்கியேத் தீர்வேன்' என சந்தோஷக் கூத்தாடினார்'' என்று பப்லு ஶ்ரீவத்சவா என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இப்படி ஜெயின் கமிஷன் விசாரணையில் பல்வேறு முக்கியத் தகவல்கள் சந்திரா சாமியைப் பற்றி பதிவாகி உள்ளன. ஆனாலும், இந்தத் தகவல்கள் எல்லாமே 1998 ஆம் ஆண்டில் காணாமல் போய்விட்டதாகச் சொல்லப்பட்டது.

''ராஜீவ் காந்தி படுகொலை விசாரணையில், சந்திரா சாமி, சுப்பிரமணியன் சுவாமியையும் விசாரிக்க வேண்டும்'' என்று ஜெயின் கமிஷன் அறிவித்தது.

ஆனால், ஏனோ அது நடக்கவில்லை. ஆனால், ராஜீவ் கொலைக்கு பின்னால் உலக நாடுகளின் சதியும் இந்திய அரசியல் தலைவர்களின் சதியும் உள்ளது என்பதுதான் சந்திரா சாமி குறித்து குற்றம் சாட்டுபவர்கள் முன் வைக்கும் வலுவான வாதம்.
Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி