மனைவியின் அஸ்தியை கரைத்துவிட்டு வீடு திரும்பிய கணவனின் உயிரை பறித்த விளம்பர பலகை!

மகாராஷ்டிரா மாநிலம் சிவாஜி நகர் பகுதியில் உள்ள புகையிரத நிலையத்துக்கு அருகே மிகப்பெரிய விளம்பர பலகை வைக்கப்பட்டிருந்தது. நேற்று அதனை அகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது திடீரென அந்த விள்பர பலகை அருகில் உள்ள வீதியில் விழுந்துள்ளது.

அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது விழுந்த விளம்பர பலகையால் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், புனேவில் புகையிரத நிலையம் அருகில் பேனர் விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஷம்ராவ் கசார் (40), ஷம்ராவ் காசர் (40), ஷிவாஜி பர்தேஷி (40), ஜாவித் கான் (40) ஆகியோர் பலியானது தெரிய வந்தது.

இதில் ஷிவாஜி பர்தேஷி மனைவியின் அஸ்தியை கரைத்துவிட்டு திரும்பியபோது விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பேனர் விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அளிக்கப்படும் என புகையிரத நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி