ஓட்டோக்களில் மீற்றர் அளவீட்டு கருவியை பொருத்தாத சாரதிகளுக்கு ஆப்பு!

ஓட்டோக்களில் மீற்றர் அளவீட்டு கருவியை பொருத்தாது ஓட்டோக்களை செலுத்தும் சாரதிகளை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்கப்படவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்தார்.

இது குறித்து வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,

ஓட்டோக்களில் பொருத்தப்பட்டுள்ள மீற்றர் அளவீட்டு கருவிகள் அடுத்த இரண்டு வாரங்களில் பரிசோதனைக்குட்படுத்தபடும் என்று குறிப்பிட்டார்.

மேலும் பரிசோதனைகள் முடிக்கப்பட்டு மீற்றர் அளவீட்டு கருவிகளுக்கான அறிக்கையானது, அதனுடன் தொடர்புடைய அமைச்சருக்கு வழங்கப்படும்.

குறித்த அறிக்கைக்கமைய சட்ட நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

எனவே, ஓட்டோக்களை செலுத்தும் சாரதிகளே! இது உங்களின் கவனத்திற்கான பதிவாகும்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி