வடக்கில் மாவீரர் நாள் நிகழ்விற்காக சிறப்பாக முன்னெடுக்கப்படும் ஏற்பாடுகள்!!

வாகரை - கண்டலடி மாவீரர் துயிலுமில்லத்திற்கான சிரமதானப்பணி இன்று துயிலுமில்ல மீள் நிர்மாணிப்பு குழுவினரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்விற்கான ஏற்பாடுகள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் உள்ள வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லத்திற்கான சிரமதானப்பணி இன்று முன்னெடுக்கப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த மாவீரர் துயிலுமில்ல மீள் நிர்மாணிப்பு குழுவின் வாகரை பிரதேச பொறுப்பாளர் மேனிகன்,

இன்று நாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள துயிலுமில்லங்களில் ஒன்றான வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லத்திற்கான சிரமதானப்பணியை முன்னெடுக்கின்றோம்.

அந்தவகையில் கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏனைய துயிலுமில்லத்திற்கான சிரமதானப்பணியும், இதர வேலைகளும் அப்பிரதேசத்திற்கு என உருவாக்கப்பட்டிருக்கும் மாவீரர் துயிலுமில்ல மீள் நிர்மாணிப்பு குழுவினரினால் முன்னெடுக்கப்பட்டன.

இதனடிப்படையில் இன்று வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லத்திற்கான சிரமதானப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.இதேவேளை, எதிர்வரும் கார்த்திகை 27ஆம் திகதி எமது தேசத்திற்காக உயிர்நீர்த்த மாவீரர் செல்வங்களுக்கான அஞ்சலியினை மிக உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பதற்கு எமது குழு மற்றும் தேசத்தின் வேர்கள் அமைப்பு முன்னாள் போராளிகள் மாவீரர்களின் பெற்றோர்கள் என பலரும் எமக்கு உறுதுணையாக உள்ளனர்.

அதனால் இம்முறை மிக எழுர்ச்சியாக நடத்த எதிர்பார்த்துள்ளோம் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என மேனிகன் குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி