அதிகார வரம்பு மீறிய செயற்பாடுகளை செய்து வந்த வடமாகாணசபை!

வட மாகாணசபையின் தெளிவற்ற, வினைத்திறனற்ற செயற்பாடுகளால் செய்ய வேண்டிய பலவற்றை செய்யாமல் தவறிழைத்துள்ளதாக வட மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"வட மாகாணசபை ஆரம்பிக்கப்பட்டு 5 ஆண்டுகளும் நிறைவடைய உள்ளன. இந்த நிலையில் மாகாணசபையின் செயற்பாடுகள் தொடர்பில் பேசப்படுகின்றது.

அதில் அரசியல் சம்பந்தமான விடயங்கள் தொடர்பில் பலதை மாகாணசபை செய்துள்ளது. ஆனால், மாகாணசபையின் நிர்வாக ரீதியான செயற்பாடுகளில் அவ்வாறில்லை.

அரசியல் சம்பந்தமான அந்த நகர்வு மட்டும் சபைக்கு போதாது. அவ்வாறு அரசியல் ரீதியான நகர்வுகளில் எங்களின் ஆதங்கங்களை வெளிக்காட்டும் வழிமுறையில் தான் பலதைச் செய்திருக்கின்றோம்.

ஆனால், மாகாணசபையின் விடயப் பரப்புக்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகளைத் தான் மாகாணசபை செய்யவேண்டியுள்ளது.

அத்தகைய செயற்பாடுகளை செய்யாததால் மாகாணசபை அதில் தோற்றிருக்கின்றது என்றே கூறலாம். அதிலும் செய்ய வேண்டிய எத்தனையோ விடயங்களைச் செய்யவும் இல்லை. அவற்றை நடைமுறைப்படுத்தவும் இல்லை.

அது மட்டுமல்ல, நாங்கள் அதிலே எத்தனையே தவறுகளை விட்டிருக்கின்றோம். சந்தர்ப்பங்களை இழந்திருக்கின்றோம்.

வினைத்திறனற்ற செயற்பாடுகளை செய்திருக்கின்றோம். எத்தனையோ அதிகார வரம்பு மீறிய செயற்பாடுகளைக் கூடச் செய்திருக்கின்றோம். இதனால் முதலமைச்சர் விக்னேஸ்வரனை நான் தனியே குற்றஞ்சாட்டுவதாகக் கருதக்கூடாது.

முதலமைச்சரின் அரசியல் செயற்பாடுகளுக்கு நான் முழு ஒத்துழைப்பை வழங்கியிருக்கின்றேன். அரசமைப்பு மாற்றத்துக்கான முயற்சிக்கு வரைவுகள் தயாரிப்பதிலும் அதனை அவர் சார்பாக அரசியல் நிர்ணயச் சபைக்கு எடுத்தியம்பியிருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி