சின்மயி வைரமுத்து மட்டும் தான் உங்களிடம் இப்படி நடந்து கொண்டாரா? தமிழ் பெண் கேட்ட சரமாரி கேள்வி வீடியோ


பிரபல பாடகியான சின்மயி வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சமீபத்தில் ஒரு பதிவை கூறியிருந்தார். சினமயின் இந்த கருத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

14-ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விடயத்தை சின்மயி தற்போது ஏன் கூற வேண்டும்? அன்றே கூறியிருக்கலாமே என்று பலரும் அவருக்கு எதிரான கருத்துக்களையும் கூறி வருகின்றனர்.

இவர்களின் இந்த கேள்விக்கு அப்போது என்னிடம் தைரியமில்லை என்று, தனி ஒரு பெண் என்ன பண்ண முடியும் என்று கூறியிருந்தார்.இந்நிலையில் சின்மயியை தமிழ் பெண் ஒருவர் இது எல்லாம் அவர் தான் டிரண்ட் ஆக வேண்டும் என்பதற்காக செய்து வருவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நீங்கள் நினைத்ததை சாதித்துவிட்டீங்க சின்மயி, உண்மைய சொல்லுங்க வைரமுத்து மட்டும் தான் உங்களிடம் அப்படி நடந்து கொண்டாரா? நீங்கள் சொல்வது உண்மையாக கூட இருக்கலாம்.

14 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது வைரமுத்துவை மட்டும் ஏன் கூறுகிறீர்கள், இப்போது உலக முழுவதிலும் ஒரு வியாதி இருக்கிறது.

அது தான் டிரண்டிங், ஒரு நான்கு நாட்களாவது நாம் டிரண்டிங்கில் இருக்க வேண்டும், இல்லை என்றால் நம்மளை மறந்துவிடுவார்கள் என்று தொடர்ந்து பல கருத்துக்களை அந்த பெண் வீடியோவில் கூறியுள்ளார்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி