பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பிரிவாக மாறியுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு!

பயங்கரவாத விசாரணைப் பிரிவு தற்போது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பிரிவாக மாறியுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வெளிநாட்டு வங்கி ஒன்றில் இருந்து பணம் பறிமாற்றம் செய்யப்பட்ட அமைச்சருக்கு சொந்தமான வங்கிக் கணக்கு சம்பந்தமாக இலங்கை மத்திய வங்கி தகவல்களை கண்டறிந்துள்ள நிலையில், அது சம்பந்தமாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

கடந்த அரசாங்கத்தில் இப்படியான சம்பவம் நடந்திருந்தால், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் அதற்கு எதிராக செயற்பட்டிருப்பார்கள். எனினும் தற்போது எந்த எதிர்ப்பையும் அவர்கள் வெளியிடுவதில்லை.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருக்கு மாதாந்தம் 25 லட்சம் ரூபாய் கிடைத்து வருவதே இதற்கு காரணம் எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.



Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி