மருத்துவமனைக்குள் நுழைந்து நோயளியின் காலை கவ்விச் சென்ற நாய்... அதிர்ச்சியில் பொதுமக்கள்!

பீஹாரில் ராம்நாத் மிஸ்ரா என்ற இளைஞர் சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் காலில் அடிபட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராம்நாத்தின் காலை அகற்ற வேண்டும் எனக் கூறி அதன்படி அவரது கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.காலை கவ்விச் சென்றது
அகற்றப்பட்ட கால் ஆபரேஷன் தியேட்டரில் இருந்தது. அப்போது ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்த தெரு நாய் ஒன்று அகற்றப்பட்ட ராம்நாத்தின் காலை கவ்விச் சென்றது.

மருத்துவமனைக்குள் புகுந்து நாய் ஒன்று நோயாளியின் காலை எடுத்து சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

இச்சம்பவமானது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி