சுமந்திரனை கொலைசெய்ய திட்டம் தீட்டிய ஐவர் கைது!!

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலைசெய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 5 சந்தேகநபர்களுக்கு எதிராகவும் தமிழ் மொழியில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சம்பத் ஜானகிய ராஜரத்ன முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே குறித்த 5 சந்தேகநபர்களுக்கு எதிராகவும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தங்களின் வழக்கை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுமாறு பிரதிவாதிகள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், அவர்களது கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, தேவை ஏற்படும் பட்சத்தில் அரச செலவில் சட்டத்தரணிகளை ஒழுங்குப்படுத்தி தருவதாக அறிவித்துள்ளார்.

இதேவேளை, வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக முன்னாள் போராளிகளான ஐவரை, கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி