சர்வதேச அரங்கில் இலங்கைக்கு கிடைத்த அபகீர்த்தி!!

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் கடன் சுமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி செய்து வரும் போலிப் பிரச்சாரங்களினால் இலங்கைக்கு சர்வதேச அரங்கில் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தை பழிவாங்கும் நோக்கில் இந்த அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுத்தது.

இதனால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடன் தவணையை மீளச் செலுத்த முடியாத நிலைமை முன்னொருபோதும் ஏற்பட்டதில்லை.

இந்த அரசாங்கத்தின் மோசமான நிர்வாகத்தினால் நாடு உலக அரங்கில் அபகீர்த்தியடைந்துள்ளது என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்..


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி