இலங்கை இராணுவத்தினரை நாட்டுக்கு திருப்பி அனுப்பும் ஐ.நா!!

ஆபிரிக்காவின் மாலி நாட்டில் கடமையாற்றும் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் அங்கம் வகிக்கும் இலங்கை இராணுவத்தினருக்கு கட்டளை வழங்கும் அதிகாரியை நாட்டுக்கு திருப்பி அழைக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் இணைந்து பணியாற்றும் இலங்கை இராணுவத்தின் லெப்டினட் கேர்ணல் தொடர்பில் நடத்தப்பட்ட மனித உரிமை விசாரணைகளை அடுத்து இந்த தீர்மானத்தை எடுக்க நேரிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் ஊடகப் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கை இராணுவத்தினர் எந்த சந்தர்ப்பத்திலும் மனித உரிமைகளை மீறவில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றம் சுமத்தும் இராணுவ லெப்டினட் கேர்ணல் கலன அமுனுபுர மிக அண்மையில் ஐ.நா அமைதிப்படையில் இணைந்து கொண்டவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் கோரிக்கைக்கு அமைய லெப்டினட் கேர்ணல் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்ட பின்னர் மீண்டும் ஐ.நா அமைதிப்படையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி