அரசியல் கைதிகள் போராட்டத்தைக் கைவிட்டனர்!!

சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 ஆம் பாகத்தை அடுத்து தேவர் மகன் படத்தின் 2ஆம் பாகத்தில் நடிக்க முடிவு செய்திருப்பதாக கமல் அறிவித்துள்ளார்.

தமிழில் இப்போது 2 -ஆம் பாகம் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சூர்யாவின் சிங்கம் படத்தின் மூன்று பாகங்கள் வெளிவந்துள்ளன. விக்ரமின் சாமி படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் திரைக்கு வந்தது. கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகமும் வந்தது. ரஜினிகாந்த் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தில் நடித்துள்ளார். இது நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

விஷால் சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். சதுரங்க வேட்டை இரண்டாம் பாகமும் தயாராகி உள்ளது. நடிகர் கமல்ஹாசனும் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து இயக்குவது பற்றி ஆலோசிப்பதாக தகவல் கசிந்தது. தற்போது அதை கமல்ஹாசன் உறுதி படுத்தியுள்ளார். இன்று ஒரு விழாவில் கலந்துக் கொண்ட கமல்ஹாசன், ரசிகர்கள் முன்னிலையில், தேவர் மகன் 2 ஆம் பாகம் உருவாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தேவர்மகன் முதல் பாகம் 1992–இல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. இதில் கமல்ஹாசனுடன் சிவாஜி கணேசன், நாசர், ரேவதி, கவுதமி நடித்து இருந்தனர். இந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன.

சங்கர் இயக்கத்தில் இந்தியன் – 2 படத்தில் நடிக்கிறார் கமல். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்க உள்ளது. இந்த படத்தோடு தேவர் மகன் – 2 படப்பிடிப்பையும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி