புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!!

கிளிநொச்சி பூநகரி சிறி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்விற்கு தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.

குறித்த பாடசாலையில் 163 புள்ளிகளை பெற்ற இரு மாணவிகள் மற்றும், புலமை பரிசில் பரீட்சையில் தோற்றிய ஏனைய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.இதன்போது உரையாற்றிய அமைச்சர்,

பாடசாலை பௌதீக வள பற்றாக்குறைகள் பற்றி நான் அறிந்தேன். பாடசாலை சுற்று மதில் மற்றும் ஏனைய கட்டட வசதிகளிற்கு எனது அமைச்சினால் உதவுவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் நல்ல அமைச்சர்களாகவோ, நல்ல தலைமைத்துவம் கொண்டவர்களாகவோ, விளையாட்டில் தேசியம், சர்வதேசம் பாராட்ட கூடிய நிலையில் முன்னேற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி