போராட்டம் நடாத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அழைப்பு!

பொருளாதாரத்தினுடைய முதுகெலும்பாக இருக்கும் தோட்டத் தொழிலாளர்களினால் நடத்தப்படுகின்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியிலும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் நடாத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட காரியாலயம் அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த போராட்டம் நாளை 24ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக போராட்டம் நடைபெறவுள்ளது.

இதேவேளை, இந்த போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி