யாழின் முக்கிய பிரதேசம் ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட அசம்பாவிதம்!

யாழ்ப்பாணத்தில் இன்று காலை நிலவிய கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பழைய பார்க் வீதிக்குக் குறுக்காக பாரிய மரமொன்று சரிந்து வீழ்ந்ததால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக யாழ் மாவட்ட செயலகத்தை அண்மித்த வீதிகள் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இன்று காலை திடீரென பெய்த மழையுடன் கூடிய பலத்த காற்றின் காரணத்தால் யாழ் வீதிகளில் வௌ்ளநீர் தேங்கி நிற்பதுடன், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி