இரண்டாக பிளவுப்பட்டுள்ள இலங்கை! இந் நிலைமை தொடருமானால் சிவில் யுத்தம்!!

இலங்கை நாடு சர்வாதிகாரம், ஜனநாயகம் என்ற வகையில் இரண்டாக பிளவுப்பட்டுள்ளது என கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், நாட்டில் இந்த நிலையை தொடரவிடக்கூடாது. இப்படியான நிலைமை தொடருமானால் சிவில் யுத்தம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

எனவே உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி