அமெரிக்காவை நெருங்கும் மைக்கேல் புயல்! ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு!!

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவை மைக்கேல் என்று பெயரிடப்பட்டுள்ள புயல் ஒன்று நெருங்கி வருவதையடுத்து ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

ஃப்ளோரிடாவின் கவர்னரான Rick Scott இந்த புயல் மிக பயங்கரமானது என்று தெரிவித்துள்ளார்.

மணிக்கு 111 மைல் வேகத்தில் மூன்றாம் வகை புயலாக மைக்கேல் நாளை ஃப்ளோரிடாவைத் தாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Okaloosa/Walton பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் Alabama/Florida பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் ஃப்ளாரன்ஸ் புயல் தாக்கிய நிலையில், தற்போது ஒன்றாம் வகை புயலாக இருக்கும் மைக்கேல் மூன்றாம் வகை புயலாக இரண்டாம் முறையாக அமெரிக்காவைத் தாக்க இருக்கிறது.

மைக்கேல் புயல் மிக பயங்கரமான ஒன்று, அது நமது நாட்டின் பல பகுதிகளுக்கு முக்கியமாக Panhandle பகுதிக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்த இருக்கிறது என்று கூறியுள்ள ஃப்ளோரிடாவின் கவர்னரான Rick Scott, சாக்குப் போக்கு சொல்ல வழியே இல்லை, தங்கள் குடும்பங்களை பாதுகாப்பதற்காக மக்கள் வீடுகளை விட்டு கண்டிப்பாக வெளியேறித்தான் ஆகவேண்டும் என்று கூறியுள்ளார்.

1,250 National Guard வீரர்களும் 4,000 ராணுவ வீரர்களும் மீட்பு பணிக்காக தயாராக இருக்கின்றனர்.

இந்த புயல் பலத்த மழையையும், மோசமான காற்றுகளையும், பெருவெள்ள அபாயத்தையும் நமது நாட்டின் பல பகுதிகளுக்கு கொண்டு வர உள்ளது. ஒவ்வொரு குடும்பமும் தயாராக இருக்க வேண்டும்.

வீடுகளை திரும்பக் கட்டி எழுப்பிவிடலாம், ஆனால் உயிர்களை மீட்டெடுக்க முடியாது என்றும் Rick Scott தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி