யாழில் மதுபானசாலைகளை அகற்றுமாறு மாபெரும் போராட்டம்!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகரில் அமைந்துள்ள மதுபானசாலையை அகற்றுமாறு கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்ட பேரணி பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு பிரதேச செயலகம் வரை சென்று நிறைவடைந்துள்ளது.

பருத்தித்துறை நகரில் குறித்த மதுபான நிலையம் அமைந்திருப்பதால் பொது மக்களுக்கு பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுவதாக தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலைகள், வணக்கத்தலங்கள், வைத்தியசாலைகள் என்பன அமைந்திருப்பதால் பொதுமக்களின் நலனைக் கருத்திற் கொண்டு மதுபானசாலையை அகற்றுமாறு கோரியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

16 பொது அமைப்புக்கள் இணைந்து இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

நகர வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடி போராட்டத்திற்கு வர்த்தகர்கள் தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.

பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட போராட்ட பேரணி ல் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலய பாடசாலை முன்பாக சென்ற போது மாணவர்களும் ஆசிரியர்களும் பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி