பிரான்சில் தீப்பிடித்த கட்டிடத் தொகுதி!!

பிரான்சின் Gagny பகுதியில் உள்ள கட்டிடம் தீப்பிடித்துள்ளதால் 50 தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Gagny பகுதியில் உள்ள இரண்டடுக்கு கட்டிடம் ஒன்று முழுவதுமாக தீப்பிடித்தது. ஆனால், கட்டிடத்திற்குள் எவரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

எனினும் அங்கிருந்த அனைத்து பொருட்களும் முழுமையாக எரிந்து சாம்பலாகின. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த 50 தீயணைப்பு படையினர், பல்வேறு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தற்போது தீயானது கட்டுக்குள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தீப்பிடித்த கட்டிடம் வீடற்றவர்களுக்கான தங்குமிடம் என்றும், 30 பேர் வரை அங்கு தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு முயற்சியில் ஈடுபட்ட வீரர்களில் இருவர் காயமடைந்ததாக தெரிய வந்துள்ளது.
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி