அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை!

எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விலையேற்றம் புதிய எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைவாக அமுல்படுத்தப்படுவதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், 149 ரூபாவாக இருந்த 1 லீட்டர் ஒக்டைன் 92 ரக பெட்ரோலின் விலை 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 1 லீட்டர் ஒக்டைன் 92 ரக பெற்றோலின் விலை 155 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒக்டைன் 95 ரக பெற்றோலின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 169 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுப்பர் டீசலின் புதிய விலை 141 ரூபாவாகும். இதற்கமைய, 1 லீட்டர் சுப்பர் டீசலின் விலையும் 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி