அமெரிக்க டொலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியில் ரூபா!

இலங்கையில் வரலாற்றில் அமெரிக்க டொலருக்கு எதிராக மிக மோசமான முறையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்திற்கமைய டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 168.12 ரூபாவாக பதிவாகியுள்ளது. டொலர் ஒன்றின் விற்பனை விலை 171.99 ரூபாவாக பதிவாகியுயுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை டொலரின் விற்பனை விலை 171.67 ரூபாவாக பதிவாகியிருந்தது.

ரூபாவின் பெறுமதியை நிலையான பெறுமதியில் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அது சாத்தியப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி