உண்மையாக பொலிஸ் மக்களின் நண்பனே, ஹொரவப்பத்தான புளியங்கடவள என்னும் பிரதேசத்தில் தந்தையொருவர் தனது உடல் அங்கவீனம் உடைய பிள்ளையுடன் மரத்தின்மேல் குடியிருந்து மாதம் 500/ரூபா பணத்திற்கு தோட்டம் பார்க்கும் வேளையில் பல நாட்களாக செய்துகொண்டு வருகிறார்.இந்நிலையில் இந்த தகவல் ஹொரவப்பத்தான பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு வந்ததை அடுத்து குறித்த அதிகாரிகள் அத்தந்தையை சென்று விசாரித்ததில் அவர் கூறியது அதிகாரிகளை சோகத்தில் ஆழ்த்தியது.
மேலும் அக்குழந்தையின் தந்தை கூறுகையில்,
அவரது மனைவி சில மாதங்களுக்கு முன் இறந்ததால் தன் அங்கவீனப்பிள்ளையை தனியாக விட்டுச்சென்று தொழில் செய்ய முடியாததால் தன் மகளைப்பார்த்துக்கொண்டு தோட்டம் பாதுகாக்கும் கடமையை செய்து வருவதாகக் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் வறுமையில் இருக்கும் தந்தைக்கும், பிள்ளைக்கும் உணவுப்பொருட்கள் கொடுத்து உதவிகள் செய்துள்ளனர்.
மேலும் அவர்களுக்கு வீட்டு வசதிகள் அமைத்துக்கொடுப்பதாகவும் ஹொரவப்பத்தான பொலிஸ் உயர் அதிகாரி அறிவித்துள்ளனர்.