வெளியானது புதிய அமைச்சரவை நியமனங்கள்!!

புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் சிலர் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கின்றன.

 1. பாதுகாப்பு அமைச்சர் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
 2. புத்த சாசனம், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
 3. மாநகர நீர் வழங்கல் அமைச்சர் - தினேஷ் குணவர்தன
 4. வெளிநாட்டு அமைச்சர் - சரத் அமுனுகம
 5. துறைமுகம் மற்றும் கப்பல்துறை - விமல் வீரவன்ச
 6. பணம் திட்டமிடல் அமைச்சர் - பந்துல குணவர்தன
 7. விவசாயம் - மஹிந்த அமரவீர
 8. மீன்பிடி அமைச்சர் - மஹிந்த அமரவீர
 9. போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து - நிமல் சிறிபாலடி சில்வா
 10. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் - ஜென்சன் பெர்னாண்டோ
 11. கல்வி அமைச்சர் - டலஸ் அலகபெரும
 12. ஊடக அமைச்சர் - கெகெலிய ரம்புக்வெல,
 13. வர்த்தக அமைச்சர்- மகிந்த சமரசிங்க
 14. தொழில் அமைச்சர் - மஹிந்தானந்த அளுத்கமகே
 15. உயர் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சர் - விஜயதாச ராஜபக்ச
 16. கண்டி நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் - எஸ்.பி. திசாநாயக்க
 17. நாடாளுமன்ற விவகார அமைச்சர் - மஹிந்த சமரசிங்க

இன்னும் பல அமைச்சர்களின் பெயர் வெளிவர உள்ளதுடன், ஆகக் குறைந்தது 30 இற்கு மேற்படாத வகையில் அமைச்சரவையும், 45 இற்கு மேற்படாத வகையில் பிரதி அமைச்சர்களும் உள்ளடங்க வேண்டியது 19 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் விதி.

அதனை பின்பற்றியே இந்த நடைமுறை இருக்கும் என பெயர் குறிப்பிட விரும்பாத அரசியல் முக்கியஸ்தர் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி