இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவே ஸ்ரீரெட்டி இப்படியான விசயத்தை செய்திருக்கிறாராம்! நீங்களே பாருங்க

நடிகை ஸ்ரீரெட்டி சில நாட்களுக்கு முன்பு தான் அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுக்களை வைத்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தினார். இதில் சிலர் சிக்கினார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் மீதும் அவர் பாலியல் புகார் சொன்னதோடு வாய்ப்பு வழங்கவில்லை என குற்றச்சாட்டை வைத்தார். ஆனால் ராகவா அதை மறுத்திருந்தார்.

இந்நிலையில் தன் பேஸ்புக்கில் நண்பர்களுக்கு நல்ல செய்தி என பதிவிட்டிருக்கிறார். இதில் அவர் நான் லாரன்ஸை அவரின் வீட்டில் சந்தித்தேன். அவருடன் நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள். என்னை நன்கு உபசரித்தார்கள். மகிழ்ச்சியாக இருந்தது.

அவருடைய அடுத்த படத்திற்கான ஆடிஷன் மூலம் எனக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். நல்ல கதாபாத்திரம் கொடுப்பதாக கூறியுள்ளார். மேலும் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார்களாம்.

இதனை ஆந்திராவில் புயலால் பாதிக்கப்பட்ட ஸ்ரீகாகுளம் மக்களுக்காக வழங்குவதாக கூறியுள்ளார்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி