யாழ்ப்பாணம் – மன்னார் இளைஞர்களுக்கு விமான நிலையத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி!

அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டார் விமான சேவைகள் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தின் ஊடாக இவர்கள் வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி செல்ல முயன்றுள்ளனர்.

இந் நிலையில் இன்று அதிகாலை விமான நிலைய இரகசிய பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு உதவிசெய்த கொழும்பு – வத்தளையைச் சேர்ந்த இருவரும் இரகசிய பொலிசாரினால் கைது செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா பொலிஸ் தலைமையக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்று கட்டுநாயக்க விமான நிலைய இரகசிய பொலிசார் தெரிவித்தனர்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி