தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டியில் வெற்றிகளைத் தட்டிச் செல்லும் வடக்கினர்!!

பொலநறுவை தேசிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவரும் தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டியில் வட மாகாண அணி வீரர்கள் 04 வெண்கலப் பதக்கங்களையும் 02 வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுள்ள நிலையில் இன்று நடைபெறவுள்ள இறுதிச் சுற்றுக்கு இரு வீரர்கள் தெரிவாகியுள்ளனர்.

வெண்கல பதக்கங்களை வவுனியாவைச் சேர்ந்த துரைமணி சதுர்சன் 91kg சத்தியமூர்த்தி கேசவன் 91Kg ஜெகநாதன் தர்சிகன் 81Kg ஆகியோருடன் பெண் வீராங்கனையான விஜயரத்ன 69Kg ஆகிய நால்வரும் பெற்றுள்ளனர்.

வெள்ளிப் பதக்கங்களை கிளிநொச்சியினைச் சேர்ந்த விற்றாலிஸ் நிக்லஸ் 81Kg மற்றும் யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த பெண் வீராங்கனையான பிரசாந்தி 69Kg என்பவரும் பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளார்கள்.

இறுதிப் போட்டிகள் இன்று மாலை 6.00மணிக்கு நடைபெறவுள்ளது.

வடமாகாண அணிக்கான குத்துச்சண்டை பயிற்றுனராக சுரங்க அவர்களும் போட்டிக்கான அணியினை நெறிப்படுத்தும் அணிப்பொறுப்பதிகாரியாக பயிற்றுனர் பசுபதி ஆனந்தராஜ் அவர்களும் கடமையாற்றி வருகின்றார்கள்.

வட மாகாண குத்துச் சண்டை அணி கடந்த வருடம் நடைபெற்ற தேசிய குத்துச் சண்டை போட்டிகளில் ஒரு வெள்ளிப் பதக்கத்தினையும் ஆறு வெண்கலப் பதக்கங்களினையும் பெற்று வட மாகாணத்திற்கு பெருமை சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி