அரசியல்கைதிகளுக்காக ஒன்று திரண்ட தமிழ்,சிங்கள மக்கள்!!

அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி அநுராதபுரம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில், சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்களால் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய், புதிய சி.ரி.ஏ சட்டத்தினை உடனே நிறுத்து என்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய தமிழ் பதாதைகளுடனும் சிங்கள மற்றும் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், போராட்டத்தின் போது வீதி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாமென போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் தள்ளியதினால் பொலிஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்மிடையே சிறு கருத்து முரண்பாடு ஏற்பட்டிருந்தது.

போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், முற்போக்குக் கூட்டணி, அநுராதபுர விவசாய அமைப்புக்கள் கலந்து கொண்டிருந்தன.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி