வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படம்!!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் பிரபல திரைப்பட நடிகர் பாபிசிம்ஹா பிரபாகரனாக நடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்டூடியோ 18 என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் பிரபாகரனாக நடிகர் பாபிசிம்ஹா நடிக்க இருக்கிறார்.

சமீபத்தில் வெளியான “சாமி ஸ்கொயர்” படத்தில் இலங்கையில் இருந்து வருபவராக வில்லன் வேடத்தில் பாபிசிம்ஹா நடித்து இருந்தார்.

“சீறும் புலிகள்” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜி.வெங்கடேஷ் குமார் இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே உனக்குள் நான், லைட்மேன் ஆகிய படங்களையும் இலங்கையில் நடந்த கடைசிகட்ட போரை மையமாக வைத்து நீலம் என்ற படத்தையும் இயக்கியவர்.

நீலம் படம் தணிக்கை அதிகாரிகளால் தடை செய்யப்பட்டுள்ளதால் வெளியாகவில்லை.

இதேவேளை விடுதலைப்புலிகளின் தலைவரின் வாழ்க்கை மற்றும் ஈழப்போர் தொடர்பில் இதற்கு முன்னரும் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ள நிலையில், தற்போது பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து “சீறும் புலிகள்” படம் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி