இலங்கையில் சில பகுதிகளில் பாரிய வெள்ள நிலைமை ஏற்படும் அபாயம்!!

இலங்கையில் பெய்து வரும் அடைமழை காரணமாக பல நீர்நிலைகளின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.

களு கங்கை, கிங் கங்கை மற்றும் அத்தனகலு ஓயவின் நீர் மட்டம் நிரம்பி வழிவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அருகிலுள்ள பகுதிகளில் பாரிய வெள்ள நிலைமை ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மழை தொடர்ந்து பெய்யுமானால் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மக்களிடம் கேட்டுள்ளது.

திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அவசர எச்சரிக்கை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்வரும் பகுதிகளின் மக்கள் மிகவும், அவதானமாக இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

களுகங்கை : மதுராவல, புலத் சிங்கள, ஹொரனை, பாலிந்தநுவர மற்றும் இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவிற்கு அருகில் உள்ள மக்கள்

கிங் கங்கை: பந்தேகம, பொபே, பொத்தல, வெலிவிட்ட, திவிதுரு, நாகொட, நியகம, தவலம மற்றும் நெலுவ பிரதேச செயலாளர் பிரிவிற்கு அருகில் உள்ள மக்கள்

அத்தனகலு ஓய : நீர்கொழும்பு, மினுவங்கொட, ஜாஎல, கம்பஹா பிரதேச செயலாளர் பிரிவிற்கு அருகில் உள்ள மக்கள் மற்றும் ஜாஎல வீதி மற்றும் கம்பஹா - மினுவங்கொட வீதிக்கு பாதிப்பு ஏற்பட கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி